செந்தமிழ்ச் சிற்பிகள் அரங்கம்

"தொன்தமிழ் வேர் தாங்கும் விழுதுகள் இவர்கள் "

“தமிழ்மொழிக்கு அளப்பரிய பங்காற்றிய எழுத்தாளர்கள் மற்றும் தமிழறிஞர்களைப் போற்றும்
வகையிலும், அத்தகைய அறிஞர் பெருமக்களை இளம் தலைமுறையினர் முன்மாதிரியாகக்
கொள்ளும் வகையிலும், “செந்தமிழ்ச் சிற்பிகள் அரங்கம்” அமைக்கப்பட்டுள்ளது.

உரைநடை/பேச்சாளர்கள்

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் (1904 - 1965)

  • பயணநூல், வாழ்க்கை வரலாறு, கவிதை, கட்டுரை, மேடைத்தமிழ் ஆகிய தளங்களில் இயங்கியவர்.
  • இரசிகமணி டி.கே.சி.யின் 'வட்டத்தொட்டி’ இலக்கிய அமைப்பைச் சேர்ந்தவர். கம்பன் கழகப் பணிகளில் ஈடுபட்டவர். பயணக் கட்டுரைகள் எழுதிய முன்னோடிகளில் ஒருவர். பண்பாட்டு நோக்கில் வழிபாட்டுத் தலங்களைப் நோக்கும் நவீனப்பார்வையை அறிமுகம் செய்தவர்.
  • மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் பணியாற்றியவர்.

25 August, 2024


மு. இராகவனார் (1878 - 1960)

  • இதழியல், பதிப்பு, கல்வி, கட்டுரை, கல்வெட்டு, நாட்டாரியல், வரலாற்றாய்வு, இலக்கணம், மேடைத்தமிழ், வாழ்க்கைவரலாறு ஆகிய தளங்களில் இயங்கியவர்.
  • தமிழ்இலக்கிய வரலாற்றாய்வின் முன்னோடிகளில் ஒருவர். சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி தொகுப்புக் குழுவின் தலைவராகச் செயல்பட்டவர்.
  • ‘ராவ் சாகிப்’உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.

25 August, 2024


இரசிகமணி டி. கே. சி. (1881 - 1954)

  • இதழியல், பதிப்பு, திறனாய்வு, கடித இலக்கியம், தமிழிசை,உரைநடை, மேடைத்தமிழ், மொழிபெயர்ப்பு, வாழ்க்கை வரலாறு, சிற்பவியல், சட்டம் ஆகிய தளங்களில் இயங்கியவர்.
  • சட்டமேலவை உறுப்பினராகவும்,இந்து அறநிலையத்துறை ஆணையராகவும் பணியாற்றியவர். தாய்மொழிவழிக் கல்வியே சிறந்தது என முன்மொழிந்தவர்.
  • வட்டத்தொட்டிஎன்னும் இலக்கிய அமைப்பைத் தொடங்கியவர். அதன்வழியே வாசிப்பின் இன்பத்தை இயக்கமாக்கியவர்.

25 August, 2024


ப.ஜீவானந்தம் (1907 - 1963)

  • இதழியல், கல்வி, நாடகவியல், கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, மேடைத்தமிழ், அரசியல், காந்தியம், பொதுவுடைமை ஆகிய தளங்களில் இயங்கியவர்.
  • சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். தமிழ் இலக்கிய மரபு சார்ந்த இவரது மேடைத்தமிழ் தனித்துவமானது. பொதுவுடைமைக் கருத்துகளைத் தமிழில் சொல்வதற்குப் புதிய சொல்லாட்சிகளை உருவாக்கியவர்.
  • சுயமரியாதை இயக்க வீரராகக் களப் போராட்டங்களில் இவர் எழுதிய பாடல்கள், தொழிலாளர்களை எழுச்சி பெறச்செய்தன.

 

 

 

25 August, 2024


உரை / பதிப்பாசிரியர்கள்

ச.வே.சுப்பிரமணியன் (1929 - 2017) 

  • கல்வி, பதிப்பு, கட்டுரை, தமிழாய்வு, மொழிபெயர்ப்பு, வேளாண்மை ஆகிய தளங்களில் இயங்கியவர்.
  • கேரளப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறைத்தலைவர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர், சாகித்திய அகாதமி குழு உறுப்பினர் ஆகிய பொறுப்புகளில் பணியாற்றியவர்.
  • ‘கி. ஆ. பெ. விசுவநாதம் விருது’, ‘கம்பன் விருது’ உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.

25 August, 2024


ச.தண்டபாணியார் (1903 - 1990)

  • கல்வி, உரைநடை, தொகுப்பு ஆகிய தளங்களில் இயங்கியவர்.
  • கலைஞர் மு. கருணாநிதி, நீதியரசர் மு. மு. இஸ்மாயில், குன்றக்குடி அடிகளார் ஆகியோரின் ஆசிரியராக இருந்தவர். பல்கலைக் கழகம், கல்லூரிகளில் தமிழ்ப் பணியாற்றியவர். திருக்குறள், திருவாசகத்தின் பெருமைகளைத் தமது நூல்கள் வழியே விளக்கிச் சிறப்பித்தவர்.
  • ‘பத்மபூஷண்’ விருது, தமிழ்நாடு அரசின் ‘திருவள்ளுவர் விருது’ உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.

25 August, 2024


ஔவை துரைசாமி (1903 - 1981)

  • கல்வி, தமிழாய்வு, இலக்கணம், கட்டுரை, கல்வெட்டு, செப்பேடு, மேடைத்தமிழ்ஆகிய தளங்களில் இயங்கியவர்.
  • பண்டையஇலக்கண,  இலக்கிய நூல்களை ஆய்வு செய்தவர். ‘ஔவை தமிழ்க் கழகத்தைத்’ தோற்றுவித்தவர். நூலுக்கு நூலருமை காட்டுவதில் நுண்ணறிஞன் எனப் பாவேந்தர் பாரதிதாசனால் பாராட்டப் பெற்றவர்.  
  • கலைமாமணிஉள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.

25 August, 2024


சர்.ஆர்.கே.சண்முகனார் (1892 - 1953)

  • கல்வி, பொருளாதாரம், இதழியல், உரைநடை, மேடைத்தமிழ், தமிழிசை, சட்டம், நிருவாகம் ஆகிய தளங்களில் இயங்கியவர்.
  • ஒன்றிய அரசின் முதல் நிதியமைச்சர், நாடாளுமன்ற முதல் அவைத்தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவர்.
  • தமிழ்க் கலைக்களஞ்சியப் பதிப்பு, தமிழ்க்கல்லூரி உருவாக்கப் பணிகளுக்குக் காரணமாக இருந்தவர்.

25 August, 2024


கா.சுப்பிரமணியனார்  (1888 - 1945)

 

  • கல்வி, உரைநடை, மேடைத்தமிழ், மொழிபெயர்ப்பு,இலக்கிய வரலாறு, சட்டம் ஆகிய தளங்களில் இயங்கியவர்.
  • திருநெல்வேலிநகராட்சி உறுப்பினர், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சிக்குழு உறுப்பினர், சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத் தலைவர் போன்ற பொறுப்புகளில் பணியாற்றியவர்.
  • ‘தமிழ்க் கா.சு.’, பல்கலைப் புலவர்’ உள்ளிட்ட பல்வேறு பட்டங்களைப் பெற்றவர்.

 

25 August, 2024


Page 9 of 20, showing 9 record(s) out of 177 total