ஈரோடு தமிழன்பன் (1933)
ஈரோடு தமிழன்பன்
(1933 )
அறிமுகம்
ஈரோடு தமிழன்பன் எழுத்தாளர், கவிஞர் (பிறப்பு 28.09.1933) மரபுக் கவிதைகளையும் புதுக்கவிதைகளையும் எழுதியுள்ளார். கவியரங்கங்களில் கவிதை வாசிப்பை நிகழ்த்தியுள்ளார். சிறு வயதிலேயே பாரதிதாசனின் இசையமுது, அழகின் சிரிப்பு போன்ற படைப்புகளை வாசித்து அதன் வழியே படைப்புலகுக்குள் நுழைந்தவர். திராவிட இயக்க நூல்களை வாசித்து அவ்வியக்கத்தின்மீது பிடிப்பு கொண்டவர். விடிவெள்ளி, மலையமான் போன்ற புனைபெயர்களில் எழுதியுள்ளார். தமிழ்ப் பொழில், கார்க்கி, சிகரம் போன்ற இதழ்களில் எழுதத் தொடங்கியவர். இவரது கவிதைகள் வங்கம், உருது, இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
இதழ்: அரிமா நோக்கு
படைப்பு:
நெஞ்சின் நிழல்
கொடிகாத்த குமரன்
சூரியப்பிறைகள்
வணக்கம் வள்ளுவ (சாகித்திய அகாதெமி விருது பெற்றது)