மேலாண்மை பொன்னுசாமி (1951 - 2017)
மேலாண்மை பொன்னுசாமி
(1951 - 2017)
அறிமுகம்
மேலாண்மை பொன்னுசாமி தமிழக சிறுகதை, மற்றும் புதின எழுத்தாளர். இவர் எழுதிய மின்சாரப்பூ என்ற சிறுகதைத் தொகுப்பு நூல் 2007 ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருதைப் பெற்றது.
வாழ்க்கைச் சுருக்கம்
விருதுநகர் மாவட்டம் மேலாண்மறைநாடு என்ற கிராமத்தில் பிறந்தவர் பொன்னுசாமி. ஏழைக் குடும்பத்தில் பிறந்த இவர் வறுமையின் காரணமாக 5-ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை. 5ஆம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாவிட்டாலும் நூல்களை வாசிப்பதை இவர் நிறுத்தவில்லை. குறிப்பாக இலக்கிய நூல்களை அதிகம் படித்தார். இடதுசாரி இலக்கிய அமைப்புகளுடன் ஏற்பட்ட தொடர்பால் இவர் எழுதத் தொடங்கினார். மேலாண்மை பொன்னுசாமி 36 புத்தகங்களை எழுதியுள்ளார். இவற்றில் 22 சிறுகதைத் தொகுப்புகள்; 6 நாவல்கள்; 6 குறுநாவல் தொகுப்புகள் ஆகியவை அடங்கும். ஒரு கட்டுரைத் தொகுப்பையும் எழுதினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை தொடங்கியதில் முக்கியப் பங்கு வகித்த இவர் அச்சங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்தார். இவரது புனைப்பெர்கள் அன்னபாக்கியன், அன்னபாக்கியச்செல்வன், ஆமார்நாட்டான்.
முக்கிய சிறுகதைத் தொகுப்புகள்
சிபிகள், பூக்காத மாலை, பூச்சுமை, மானுடப் பிரவாகம், காகிதம், கணக்கு, மனப் பூ, தழும்பு, தாய்மதி, உயிர்க்காற்று, என்கனா, மனப்பூ, ஒருமாலைப் பூத்து வரும், அன்பூவலம், வெண்பூமனம், மானாவாரிப்பூ, இராசாத்தி, குறுநாவல், ஈஸ்வர…, பாசத்தீ, தழும்பு, மரம், கோடுகள்
நாவல்
முற்றுகை, அச்சமே நரகம், ஆகாய சிறகுகள், மின்சாரப்பூ, ஊர்மண், முழுநிலா
விருதுகள்
2007 சாகித்திய அகாதமி விருது
மனப் பூ தொகுப்புக்கு தமிழக அரசின் இலக்கிய விருது
வட அமெரிக்கத் தமிழ் சங்கப் பேரவையின் "மாட்சிமைப் பரிசு" என்ற கேடயம்.
உயிர்க் காற்று தொகுப்புக்கு பாரத டேட் வங்கியின் இலக்கிய விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகள்.