மணவை முஸ்தபா (1935  - 2017)

மணவை முஸ்தபா

 

(1935  - 2017)

அறிமுகம்

மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கு அருப்பெரும் பணியாற்றிய தமிழ் அறிஞர். இவர் அறிவியல் தமிழ்த் தந்தை என்றும் அறியப்படுகிறார். அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், கணினி துறைச் சார்ந்த 8 கலைச் சொல் அகராதிகளை வெளியிட்டவர். அறிவியல் தமிழ் அறக்கட்டளை என்னும் நிறுவனத்தை நிறுவி அறிவியல் தமிழ் பணியை தொடர்ந்தவர்.

 வாழ்க்கைக் குறிப்பு

1935 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 15 ஆம் தேதி மீராசா ராவுத்தரின் மகனாகப் பிறந்தார் முஸ்தஃபா. திண்டுக்கல் அருகே உள்ள பிலாத்து என்ற சிறிய கிராமம் தான் இவரது சொந்த ஊர். இவர் மணப்பாறை அருகில் உள்ள இளங்காகுறிச்சியில் 15 சூன் 1935ஆம் நாள் பிறந்தார்.

 ஆற்றிய பணிகள்

திரைப்படத் தணிக்கை குழு உறுப்பினராக 1977 முதல் 1986 முடிய பணியாற்றினார். மீரா அற நிறுவனம்” தலைவராகவும், எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் தமிழ் வளர்ச்சித்துறை ஆலோசகராகவும், 2006 - 2009 வரை தமிழ்நாடு அரசின் அறிவியல் தமிழ் மன்றத்தின் தலைவராக பொறுப்பு வகித்தார். ‘அறிவியல் தமிழ் அறக்கட்டளையின்” தலைவராகவும், தமிழ் மொழி மேம்பாட்டு வாரியத்தின் உறுப்பினரகவும், செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் சென்னை உறுப்பினராகவும் இருந்தார்.

 எழுதிய நூல்கள்

இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்

மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம்

கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி

கணினி களஞ்சிய பேரகராதி

மருத்துவக் களஞ்சிய பேரகராதி

செம்மொழி உள்ளும் புறமும்

விழா தந்த விழிப்பு

சிறுவர்க்கும் சுதந்திரம்

தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்

பெருமானாரின் பிற சமயக் கண்ணோட்டம்

அன்றாட வாழ்வில் அழகு தமிழ்

பெற்ற விருதுகளும் சிறப்புகளும்

கலைமாமணி விருது (1985) - ‘திரு.வி.க.” விருது (1989) ‘எம்ஜி.ஆர்.” விருது (1996) ‘தமிழ் தூதுவர்’ விருது (1994), ‘அறிவியல் தமிழ்ச் சிற்பி' விருது (1987) ‘அறிவியல் தமிழ் வித்தகர்” விருது (1995) ‘அறிவியல் தமிழேறு” விருது (1996) ‘ராஜா சர் முத்தையா செட்டியார் விருது” (1995) “முத்தமிழ் வித்தகர்” (1996) ‘தந்தை பெரியார் விருது” ‘அறிவியல் தமிழருவி” விருது (1998) ‘சேவா ரத்னா” விருது (1998) ‘சான்றோர் விருது” (2000) ‘மாமனிதர்” விருது (1999) ‘அறிவியல் தமிழ் தந்தை” விருது (2003).

மணவை முஸ்தபா

(1935  - 2017)

 

  • அறிவியல் தமிழ் ஒன்றே இவரது குறிக்கோள்.