எல்டிசாமிக்கண்ணு (1865 - 1925)
எல்.டி.சாமிக்கண்ணு
(1865 - 1925)
அறிமுகம்
லூயிஸ் டாமினிக் சாமிக்கண்ணு பிள்ளை (பி. பெப்ரவரி 11, 1865 - இ. செப்டம்பர் 10, 1925) ஒரு இந்திய அரசியல்வாதி, வரலாற்றாளர், மொழியியலாளர் மற்றும் வானியலாளர். சென்னை மாகாணத்தில் ஒரு ஏழை கிறித்தவக் குடும்பத்தில் பிறந்தார். சென்னையில் பள்ளிக்கல்வி மற்றும் சட்டப் படிப்பினை முடித்தார்.
1920-25 காலகட்டத்தில் சென்னை மாகாண அரசின் தலைமைச் செயலராகப் பணியாற்றினார். 1924ல் சென்னை மாகாண சட்டமன்ற அவைத்தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலின் மூலம் நீதிக்கட்சி சார்பாகப் சாமிக்கண்ணு வெற்றிப் பெற்று முதல் அவைத் தலைவரானார்.
தமிழ் மற்றும் சமுதாயப் பணி
- லூயிஸ் டாமினிக் சாமிக்கண்ணு பன்மொழிப்புலமை கொண்டவர். முதன்மையாக மொழிபெயர்ப்பாளர்.
- சாமிக்கண்ணு பிள்ளை முறையாகத் தமிழ் இலக்கியங்களைப் படித்தவரல்லர் ஆயினும் இந்தியப் பஞ்சாங்கத்தை ஆராய்ச்சி செய்த போது தமிழக வரலாற்று நூல்களைப் படிக்க வேண்டிய சூழ்நிலையில் தமிழ் இலக்கியங்களையும் படித்தார்.
- இவருடைய ஆராய்ச்சிக் கட்டுரைகள், கல்வெட்டு, மொழி ஆய்வுகள், தமிழறிஞர்களால் மேற்கோள் காட்டி பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
- தமிழ் இலக்கியங்களின் காலங்களைக் கணித்தவர்களில் முக்கியமானவராகக் கருதப்படுகிறார்.
- வையாபுரிப் பிள்ளை தமிழ் நூல்களின் காலத்தை அறிவியல் ரீதியான கால ஆராய்ச்சிக்கு, சாமிக்கண்ணு பிள்ளையை மேற்கோள் காட்டுகிறார்.
- சட்டசபைப் பேச்சுகளையும் பொதுக்கூட்டங்களில் பேசிய பேச்சுகளையும் குறிப்பெடுக்க ஆங்கிலச் சுருக்கெழுத்து அவசியம் என்று உணர்ந்து சுருக்கெழுத்து நூலான "Phonetic Shorthand"ஐ வெளியிட்டார்.
- அவைத்தலைவராக இருந்த போது சட்டமன்ற நூலகத்தை உருவாக்கினார்.
- 1914-ல் திருச்சி புனித ஜோசப் கல்லூரி வரலாற்றுத் துறை சார்பாக சாமிக்கண்ணு பன்னிரு ஆழ்வார்களில் சிலர், இரண்டாம் குலோத்துங்கன், பிற்காலப் பாண்டியர்கள் போன்றோர்களின் காலங்களை வானிலைக் கோள்களின் அடிப்படையில் கணித்துப் பேசினார்.
படைப்புகள்
இவரது இந்தியப் பஞ்சாங்கம் நூல் முக்கியமான தமிழாய்வு நூல்.
Panchang and Horoscope.
An Indian ephemeris, A. D. 1800 to A. D. 2000.
Indian Chronology. 1911.
விருதுகள்/சிறப்புகள்
திவான் பகதூர் பட்டம் பெற்ற இவர், 1924ல் பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு அமைப்புப் பட்டியலில் (Order of the Indian Empire) இடம் பெற்றார்.