இமையம் (1964)
இமையம் (1964)
அறிமுகம்
இமையம் (பிறப்பு மார்ச் 10, 1964) என்ற புனைபெயரில் எழுதும் வெ. அண்ணாமலை, கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், கழுதூரில் பிறந்தவர். தனது முதல் புதினமான கோவேறு கழுதைகள் மூலம் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமானார். எழுத்தாளர் சுந்தர ராமசாமி ”கோவேறு கழுதைகள்” நாவலைப் பற்றிக் கூறுகையில், தமிழ் எழுத்துலகில் கடந்த நூறு ஆண்டுகால வளர்ச்சியில், இந்த நாவலுக்கு இணையானது வேறொன்றும் இல்லை என்று புகழ்ந்து கூறியுள்ளார்.
நூல்கள்
தமிழ் நாட்டுக் கிராமங்களுக்குள் நிலவும் மனிதநேயமற்ற வேறுபாடுகளைக் கவனப்படுத்துவதன் மூலம் தனது படைப்புகளில் பொருளாதார, சமூகப் பண்பாட்டுத் தளங்களில் நிலவும் முரண்பாடுகளையும் ஆதிக்கத்தின் குரூரங்களையும் முன் வைக்கிறார்.
புதினங்கள்
- கோவேறு கழுதைகள் (நாவல்) - 1994
- ஆறுமுகம் (நாவல்) - 1999
- செடல் (நாவல்)-2006
- எங் கதெ (நாவல்) - 2015
- செல்லாத பணம் (நாவல்) - 2018
- பெத்தவன் (குறுநாவல்)_2018
- வாழ்க வாழ்க (குறுநாவல்)_2020
- இப்போதும் உயிரோடுடன் இருக்கிறேன் (நாவல்) 2022
சிறுகதைத் தொகுப்புகள்
- மண்பாரம் (சிறுகதைத் தொகுப்பு) -2002
- வீடியோ மாரியம்மன் (சிறுகதைத் தொகுப்பு) - 2008
- கொலைச் சேவல் (சிறுகதைத் தொகுப்பு) - 2013
- சாவு சோறு (சிறுகதைத் தொகுப்பு) - 2014
- பெத்தவன் (நெடுங்கதை) - க்ரியா பதிப்பகம் - 2013
- நறுமணம் (சிறுகதைத் தொகுப்பு) - 2016
- நன்மாறன் கோட்டைக் கதை (சிறுகதைத் தொகுப்பு) - 2019
சிறுகதைகள்
மொழிப் பெயர்க்கப்பட்ட நூல்கள்
- கோவேறு கழுதைகள் என்ற புதினம், 2001 இல் பீஸ்ட் ஆஃப் பர்டன் (BEAST OF BURDEN)) என்ற பெயரில் East West Books என்ற பதிப்பகத்தாரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இதே புதினம் 2009 இல் பாஷா பாரதி என்னும் நிறுவனத்தால் கன்னடத்திலும் மொழிபெயர்ப்பு செய்து வெளியிடப்பெற்றுள்ளது.
- ஆறுமுகம் என்ற புதினம் கதா நிறுவனத்தால் அதே பெயரில் ஆங்கிலத்தில் 2006 இல் வெளியிடப்பெற்றுள்ளது
- பெத்தவன் என்ற நெடுங்கதை Oxford University Press என்ற பதிப்பகத்தின் மூலம் 'The Begetter' என்ற பெயரில் 2015 இல் வெளியிடப்பட்டுள்ளது.
விருதுகளும் சிறப்புகளும்
- · சாகித்திய அகாதமி விருது - 2020 - செல்லாத பணம் புதினம்
- · அக்னி அட்சரம் விருது - 1994
- · தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது - 1994
- · அமுதன் அடிகள் இலக்கிய விருது - 1998
- · திருப்பூர் தமிழ்ச் சங்க விருது - 1999
- · இந்திய அரசின் பண்பாட்டு அமைச்சகம் இளநிலை ஆய்வு நல்கையை-2002
- · தமிழக அரசின் தமிழ்த் தென்றல் திரு வி.க. விருது -2010
- · பெரியார் விருது - 2013 - திராவிடர் கழகம்.
· இயல் விருது - 2018 - தமிழ் இலக்கியத் தோட்டம், கனடா