சோதர்மன் (1953)

சோ. தர்மன்
(1953)
அறிமுகம்
சோ. தர்மன் (பிறப்பு: ஆகஸ்ட் 8, 1953) புதின, சிறுகதை எழுத்தாளர் ஆவார். கரிசல் மண் சார்ந்த வேளாண் மக்களின் வாழ்க்கையைப் பதிவு செய்யும் படைப்பாளிகளில் முக்கியமானவர். கி. ராஜநாராயணனின் எழுத்துகளால் ஈர்க்கப்பட்டு எழுத்தாளராகப் பரிணமித்தவர்களில் ஒருவர். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த சோ. தர்மராஜ் எனும் இயற்பெயர்கொண்ட இவர், பொன்னுத்தாய், சோலையப்பன் ஆகியோருக்கு மகனாக 1953 ஆகத்து 8-ஆம் நாள் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டத்திலுள்ள கடலையூருக்கு அருகில் உருளைகுடி என்னும் சிற்றூரில் பிறந்தார். இவர் கண்மாயின் ஈரம் கொண்ட எழுத்துக்காரர்! என தமிழ் இந்து பத்திரிக்கையால் புகழ பெற்றவர்.
இவரது படைப்புகள்
புதினம்
- கூகை (தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்). இப்புதினம் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தால் ஆங்கிலத்திலும் "மூங்கா" என்னும் பெயரில் மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
- சூல் (2016) (சுஜாதா விருதையும் சாகித்ய அகாதமி விருதையும் பெற்ற நூல்)
- தூர்வை (2017)
- பதிமூனாவது மையவாடி (2020)
சிறுகதைத் தொகுதிகள்
- ஈரம் (சிறுகதைத்தொகுதி)
- சோகவனம்
- வனக்குமாரன்
- அன்பின் சிப்பி (2019)
- நீர்ப்பழி
வாழ்க்கை வரலாறு
- வில்லிசைக்கலைஞர் பிச்சைக்குட்டி (2014)
விருதுகள்
- 1992 மற்றும் 1994 ஆண்டுகளில் இலக்கியச் சிந்தனையின் சிறந்த சிறுகதைக்கான விருதினைப் பெற்றிருக்கிறார்.
- கூகை என்னும் புதினத்திற்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலுக்கான பரிசினைப் பெற்றிருக்கிறார்.
- சூல் என்னும் புதினத்திற்காக 2016-ஆம் ஆண்டிற்கான சுஜாதா விருதைப் பெற்றார்.
- சூல் என்னும் புதினத்திற்காக 2019-ஆம் ஆண்டில் சாகித்ய அகாதமி விருதைப்பெற்றார்.
5. தமிழ் இலக்கியப் பங்களிப்பிற்காக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் வழங்கும் `மனோன்மணியம் சுந்தரனார் விருது.