இராபர்ட் கால்டுவெல் (1814 - 1891)
இராபர்ட் கால்டுவெல் (1814 - 1891)
அறிமுகம்
இராபர்ட் கால்டுவெல் 1814 மே 7-ம் தேதி அயர்லாந்து நாட்டில் பிறந்தார். தனது 24 வயதில், ‘லண்டன் மிஷனரி சொசைட்டி’ எனும் கிறித்துவ மதக் குழுவுடன் இணைந்து 1838 ஜனவரி 8-ம்தேதி சென்னைக்கு வந்தார். பின்னர் தமிழகத்தின் இடையன்குடி எனும் ஊரில் தனது மதப்பணியை மேற்கொண்ட அதே வேளையில் 50 ஆண்டு காலம் மொழி ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார்.
தமிழ் மற்றும் இலக்கியப் பணி
- திராவிட மொழிகளின் தனித்துவத்தை நிலை நிறுத்தியதில் பெரும் பங்கு இவருடையது.
- சென்னையில் இருந்து திருநெல்வேலி சென்ற இவர் தரங்கம்பாடி, தஞ்சாவூர், நீலகிரி, கோயம்புத்தூர், மதுரை வழியாகச் செல்லும் போது அந்தந்தப் பகுதி மக்களின் வட்டாரத் தமிழ், பேச்சு மொழி, பண்பாடுகள் குறித்து அறிந்து கொண்டு வந்தார்.
- 50 ஆண்டு காலம் மொழி ஆராய்ச்சியில் ஈடுபட்டதன் விளைவாக குஜராத்தி, மராத்தி, ஒரிசா, தக்காணப்பகுதி, நீங்கலாகப் பலுசிஸ்தானம், வங்காளத்தின், இராஜ்மகால் மலைகள் தொட்டு கன்னியாகுமரி வரையும் திரவிட மொழிக் குடும்ப மொழிகளே ஆளப்பெற்றிருந்தது என்கிறார்.
- திருநெல்வேலியில் பணியாற்றிய காலத்தில், அகழ்வாய்வுகளில் ஈடுபட்டுப் பண்டைய கட்டிடங்களின் அடிப்படைகளையும் ஈமத்தாழிகள், நாணயங்கள் ஆகியவற்றையும் வெளிக் கொணர்ந்தார்.
- பாண்டிய நாட்டின் மீன் சின்னம் பொறித்த தங்கக் காசுகளைக் கண்டறிந்தார்.
படைப்புகள்
- திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு’
(A Political and General History of Tinnevelly) - ஆங்கில மொழியில் இயற்றிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (1856) எனும் நூல் புகழ்பெற்றது.
- பரதகண்ட புராதனம். தாமரைத் தடாகம், நற்கருணை தியானமாலை உள்ளிட்ட தமிழ் நூல்களை இயற்றியுள்ளார்.
- Records of the Early History of the Tinnevelly Mission உள்ளிட்ட ஆங்கில நூல்களை இயற்றியுள்ளார்.
விருதுகள்/பட்டங்கள்/சிறப்புகள்
- “திராவிட மொழியியல் ஆய்வின் முன்னோடி” என்று அறியப்படுகிறார்.