அழ.வள்ளியப்பா (1922 - 1989) 

அழ. வள்ளியப்பா

(1922 - 1989)

அறிமுகம்

அழ. வள்ளியப்பா (நவம்பர் 71922மார்ச் 161989) குழந்தை இலக்கியங்கள் படைத்த மிக முக்கியமான கவிஞர். 2,000 க்கும் மேலான குழந்தைகளுக்கான பாடல்கள் எழுதியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இராயவரத்தில் 1922 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த அழகப்ப செட்டியார், உமையாள் ஆச்சி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். பெற்றோர் இவருக்குச் சூட்டிய பெயர் வள்ளியப்பன். ஐந்தாம் வயதில் தான் பிறந்த வீட்டிற்கு அடுத்த வீட்டில் வாழ்ந்த அழகப்பன் என்பவருக்குத் தத்துப்பிள்ளையாகச் சென்றார்.  இராயவரம் காந்தி ஆரம்பப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். பின்னர் இராமச்சந்திரபுரத்தில் உள்ள பூமீசுவரசுவாமி இலவச உயர்நிலைப் பள்ளியில் படித்தார்.

 

பாராட்டும் விருதும்

  • 1963 ஆம் ஆண்டில் இலக்னோ நடைபெற்ற அகில இந்திய குழந்தை எழுத்தாளர் மாநாட்டில் பதக்கமும் பாராட்டிதழும் வழங்கப்பட்டன.
  • குழந்தைகள் இலக்கிய முன்னோடி, பிள்ளைக் கவியரசு, மழலைக் கவிச் செம்மல் என்று சில அமைப்புகள் பாராட்டி போற்றியுள்ளனர்.
  • 1982 -ல் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தினால் "தமிழ்ப் பேரவைச் செம்மல்" என்று விருதளிக்கப்பட்டு பாராட்டப்பட்டார்.
  • 1982ஆம் ஆண்டில் மதுரை காமராசர் பல்கலைக்கழக கல்விக்குழுவில் வாழ்நாள் உறுப்பினராக ஏற்றுக்கொள்ளப்பட்டார்.
  • 1970 நவம்பர் 22ஆம் நாள் "குழந்தைக்கவிஞர் இலக்கியப்பணி" வெள்ளிவிழா சென்னையில் நடைபெற்றது.
  • பூவண்ணன் தலைமையில் இயங்கிய பாலர் பண்பாட்டுக்கழகம் 1980ஆம் ஆண்டில் 'வள்ளியப்பா வானொலி-தொலைக்காட்சிச் சிறுவர் சங்கம்' என்னும் பிரிவைத் தொடங்கியது.
  • 'பிள்ளைக்கவியரசு' என்னும் பட்டத்தை சென்னை பாரதி இளைஞர் சங்கம் வழங்கியது.
  • 'மழலைக்கவிச்செம்மல்' என்னும் பட்டத்தை காரைக்குடி சர்வதேசக் குழந்தைகள் ஆண்டுவிழாக்குழு வழங்கியது.

அழ. வள்ளியப்பாவின் வாழ்க்கை வரலாற்றை அவரது மணிவிழா ஆண்டில் "குழந்தைக்கவிஞர் வள்ளியப்பா (வாழ்க்கை வரலாறு) என்னும் நூலை முனைவர் பூவண்ணன் எழுதினார். அதனை 1982 நவம்பரில் வானதி பதிப்பகம் வெளியிட்டது.