சு.சமுத்திரம் (1941 - 2003)
சு.சமுத்திரம்
(1941 - 2003)
அறிமுகம்
சு.சமுத்திரம் தென்காசி மாவட்டம் தென்காசி வட்டம் திப்பணம்பட்டி கிராமத்தில் பிறந்தவர். அவர் அகில இந்திய வானொலியிலும் தூர்தர்ஷனினிலும் வேலை பார்த்தவர். அவர் 14 புதினங்கள், 4 குறுநாவல்கள், 2 கட்டுரைத் தொகுப்புகள், ஒரு நாடகம், 300க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். அவரது சிறுகதைகள் 22 தொகுப்புகளாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளன அவரது பல படைப்புகள் தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவர் ஒரு சோஷியலிசவாதி. அவரது படைப்புகளில் சோஷியலிசக் கருத்துக்கள் பரவியிருந்தது. அடிமட்டத்து மக்களின் வாழ்க்கையும் அவர்கள் பட்ட துன்பங்களும் அவரது படைப்புகளின் முக்கியக்களமாக அமைந்தன. 1990ல் அவரது புதினம் வேரில் பழுத்த பலா சாகித்திய அகாதமி விருது பெற்றது. 2003ல் சென்னையில் அவர் ஒரு விபத்தில் காலமானார்.
விருதுகள்
- சாகித்திய அகாதமி விருது -1990
- தமிழ் அன்னை பரிசு - தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்திடமிருந்து
- இலக்கியச் சிந்தனை - சிறுகதைப் பரிசு
- கலைஞர் விருது - முரசொலி அறக்கட்டளையிடமிருந்து
எழுதிய புத்தகங்கள்
- ஊருக்குள் ஒரு புரட்சி
- ஒரு கோட்டுக்கு வெளியே
- கடித உறவுகள்
- மண் சுமை
- தாய்மைக்கு வறட்சி இல்லை
- வெளிச்சத்தை நோக்கி
- வளர்ப்பு மகள்
- சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்
- தராசு
- சத்திய ஆவேசம்
- இல்லந்தோறும் இதயங்கள்
- சோற்றூ பட்டாளம்
- பூ நாகம்
- மூட்டம்,
- சாமியாடிகள்