ஜெயகாந்தன் (1934 - 2015)

ஜெயகாந்தன்
(1934 - 2015)
அறிமுகம்
ஜெயகாந்தன் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இந்திய அரசின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான ஞான பீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர். இவருடைய படைப்பிலக்கியக் களம் சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், திரைப்படங்கள் எனப் பரந்து இருக்கின்றது.
வாழ்க்கைக் குறிப்பு
ஜெயகாந்தன் 1934-ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் என்ற ஊரில், ஒரு வேளாண் குடும்பத்தில் தண்டபாணிப் பிள்ளை,மகாலெட்சுமி அம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். பள்ளிப்படிப்பில் நாட்டம் இல்லாமையால், ஐந்தாம் வகுப்பிலேயே பள்ளி வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்தார். அவரது இலக்கிய வாழ்க்கை 1950களில் தொடங்கியது - சரஸ்வதி, தாமரை, கிராம ஊழியன், ஆனந்த விகடன் போன்ற ஏடுகளில் இவரது படைப்புகள் வெளியாயின. ஜெயகாந்தன் சில ஆண்டுகள், தமிழ்த் திரையுலகிலும் வலம் வந்தார். இவரது நாவல்களான "உன்னைப் போல் ஒருவன்" மற்றும் "சில நேரங்களில் சில மனிதர்கள்" ஆகியவை படமாக்கப்பட்டன. இதில் "உன்னைப் போல் ஒருவன்" சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான குடியரசுத் தலைவர் விருதில் மூன்றாம் விருதைப் பெற்றது.
படைப்புகள்
தன் வரலாறு,
ஒர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் (அக்டோபர் 1974) வாழ்விக்க வந்த காந்தி 1973
ஒரு கதாசிரியனின் கதை
நாவல்கள் மற்றும் குறுநாவல்கள்
- வாழ்க்கை அழைக்கிறது (ஆகஸ்ட் 1957)
- கைவிலங்கு (ஜனவரி 1961)
- யாருக்காக அழுதான்? (பெப்ரவரி 1962)
- பிரம்ம உபதேசம் (மே 1963)
- பிரியாலயம் (ஆகஸ்ட் 1965)
- கருணையினால் அல்ல (நவம்பர் 1965)
- பாரீசுக்குப் போ! (டிசம்பர் 1966)
- கோகிலா என்ன செய்துவிட்டாள்? (நவம்பர் 1967)
- சில நேரங்களில் சில மனிதர்கள் (ஜூன் 1970)
- ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (ஜனவரி 1971)
- ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் (ஏப்ரல் 1973)
- ஜெய ஜெய சங்கர... (செப்டம்பர் 1977)
- கங்கை எங்கே போகிறாள் (டிசம்பர் 1978)
- ஒரு குடும்பத்தில் நடக்கிறது... (ஜனவரி 1979)
- பாவம், இவள் ஒரு பாப்பாத்தி! (மார்ச் 1979)
- எங்கெங்கு காணினும்... (மே 1979)
- ஊருக்கு நூறு பேர் (ஜூன் 1979)
- கரிக்கோடுகள் (ஜூலை 1979)
- மூங்கில் காட்டினுள்ளே (செப்டம்பர் 1979)
திரைப்படமாக்கப்பட்ட இவருடைய கதைகள்
சில நேரங்களில் சில மனிதர்கள் (இயக்குநர் : பீம்சிங்)
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (இயக்குநர் : பீம்சிங்)
ஊருக்கு நூறு பேர் (இயக்குநர் : லெனின்)
விருதுகள்
- சாகித்திய அகாதமி விருது
- 2002-ம் ஆண்டுக்கான ஞான பீட விருது
- 2009-ம் ஆண்டின் இலக்கியத்துறைக்கான பத்ம பூஷன் விருது
- ரஷ்ய விருது