சுத்தானந்த பாரதியார் (1897-1990)

சுத்தானந்த பாரதியார் (1897-1990)
அறிமுகம்
சுத்தானந்த பாரதியார் (மே 11, 1897 - மார்ச் 7, 1990) கவியோகி, மகரிஷி என்று போற்றப்பட்டவர் ஆவார். இவர் கவிதைகள், தமிழிசைப் பாடல்கள், உரைநடை நூல்கள், மேடை நாடகங்கள் எனப் பல நூல்களை இயற்றியவராவார்.
சுத்தானந்த பாரதியார் எனப் பின்னாளில் அழைக்கப்பட்ட வேங்கட சுப்பிரமணியன் பனையூரைச் சொந்த ஊராகக்கொண்ட சிவிகுல ஜடாதரய்யர் காமாட்சி அம்மையார் இணையரின் நான்காவது குழந்தையாக 1897 மே 11-இல் தமிழ்நாடு சிவகங்கையில் பிறந்தார். ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது தான் 'பாரத சக்தி' எனும் மகா காவியத்தைப் பாடத் தொடங்கினார். இவர் இயற்றிய நூல்களில் யோகசித்தி, கீர்த்தனாஞ்சலி, மேளராகமாலை ஆகிய கவிதை நூல்கள் பிரபலமானவை. தமிழின் வரலாற்றில் சிறப்பாகத் தொண்டாற்றிய இவர், தமது தொண்ணூற்று இரண்டாம் அகவையில் காலமானார்.
திருக்குறளை அதே ஈரடிகளில், அதே நடை, சந்தத்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் சுத்தானந்த பாரதியார், 1968-ஆம் ஆண்டு சென்னையில் நடந்த இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில், அப்புத்தகம் திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த பதிப்பு கழகத்தாரால் வெளியிடப்பட்டது.
1984 தமிழக அரசும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகமும் நிறுவிய முதல் ராஜராஜன் விருதைப் (மாமன்னன் இராசராசன் படைப்பிலக்கியப் பெரும் பரிசு) பெற்றார் கவியோகி சுத்தானந்த பாரதி. அவர் எழுதிய ஆயிரக்கணக்கான நூல்களில், "பாரத சக்தி மகாகாவியம்" அவர், சுதந்திரம் கிடைக்கும் வரை பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் ஏறத்தாழ 20 ஆண்டுகள் மவுன விரதம் காத்தபோது மனதில் தோன்றிய காவியம் ஆகும்.
சோவியத் கீதாஞ்சலி என்னும் நூல் சோவியத் ஒன்றியத்தின் சோவியத் நாடு நேரு நினைவுப் பரிசு பெற்றது.
எழுதிய நூல்க
ஸ்ரீ அரவிந்த யோக தீபிகை
பேரின்பம்
ஞானி எமர்ஸன்
நாவலர் பெருமான்
உடலுறுதி
விஞ்ஞான மணிகள்
பாரத சக்தி மகா காவியம்
யோக சித்தி
அருட்செல்வம்
கவிக் கனவுகள்
கீர்த்தனாஞ்சலி
நவரஸ நடனாஞ்சலி
பாரத கீதம்
தமிழ்க் கனல்
ஆத்ம சோதனை
ஏழைபடும் பாடு
இளிச்சவாயன்
அன்னை
இவளும் அவளும்
நாகரிகப் பண்ணை
பகவத் கீதை
இல்லற ஒழுக்கம்
பெரியவாள் கதை
அருட்பெருமான்
சிவானந்த ஜோதி
இதுதான் உலகம்
தயானந்த ஜோதி
பாப்பா பாட்டு
கலிமாவின் காதல்
Sri Aurobindo
Integral Yoga
The Gospel of Perfect Life
Yogi Shuddhananda
பொது நெறி
கல்விக்கதிர்
தியான சாதனம்
நாவலர் பெருமான்
பாட்டாளி பாட்டு
சோதனையும் சாதனையும்