செந்தமிழ்ச் சிற்பிகள் அரங்கம்

"தொன்தமிழ் வேர் தாங்கும் விழுதுகள் இவர்கள் "

“தமிழ்மொழிக்கு அளப்பரிய பங்காற்றிய எழுத்தாளர்கள் மற்றும் தமிழறிஞர்களைப் போற்றும்
வகையிலும், அத்தகைய அறிஞர் பெருமக்களை இளம் தலைமுறையினர் முன்மாதிரியாகக்
கொள்ளும் வகையிலும், “செந்தமிழ்ச் சிற்பிகள் அரங்கம்” அமைக்கப்பட்டுள்ளது.

அகராதி/கலைக்களஞ்சியம் தொகுத்தோர்கள்

ச.வையாபுரியார் (1891 - 1956)

  • கல்வி, பதிப்பு, அகராதி, நாவல், சிறுகதை, கட்டுரை, திறனாய்வு, மொழிபெயர்ப்பு, இலக்கிய வரலாறு, மேடைத்தமிழ், காலக்கணிப்பு, சட்டம் ஆகிய தளங்களில் இயங்கியவர்.
  • தமிழ், மலையாளப் பேரகராதி பதிப்புப் பணியில் ஈடுபட்டவர். சென்னை, திருவிதாங்கூர் பல்கலைக் கழகங்களில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியவர். அறிவியல் தமிழுக்கு அடித்தளமிட்டவர்களில் ஒருவர்.
  • ‘ராவ் சாகிப்’ உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.

25 February, 2024


இசை / நாடகத்தமிழ் அறிஞர்கள்

விபுலானந்த அடிகள் (1892-1947)

  • கல்வி, தமிழிசை, இதழியல், கட்டுரை, திறனாய்வு, நாடகம், மொழியியல், கலைச்சொல்லாக்கம், தத்துவம், துறவறம், அறிவியல், மொழிபெயர்ப்பு ஆகிய தளங்களில் இயங்கியவர்.
  • மதுரை நான்காம் தமிழ்ச்சங்கத் தேர்வுத்தலைவராக நியமிக்கப்பட்டவர். தமிழ் இலக்கியத்தை உலக
    நாகரிகங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என வலியுறுத்தியவர்.

25 February, 2024


சங்கரதாஸ் சுவாமிகள் (1867 - 1922)

  • நாடகம், பயிற்சி, இசைப்பாடல், மொழிபெயர்ப்பு ஆகிய தளங்களில் இயங்கியவர்.
  • நாடகக் கலையை அரங்க மரபிற்கேற்ப உருவாக்கிய முன்னோடி. நாடக மேடையின் மூலம் தமிழ் வளர்த்த பெரும் கலைஞர். நாட்டின் தொல்கதைகள், வரலாற்று நிகழ்வுகள் ஆகியவற்றை நாடகங்களின் மூலம்‌ பெருந்திரளான மக்களுக்கு வழங்கியவர்.
  • நாடக ஆசிரியர், பயிற்சியாளர் ஆகிய பங்களிப்புகளால்
    ‘தமிழ் நாடகத் தந்தை’, ‘தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்' எனப் போற்றப்படுபவர்.

25 February, 2024


ஆபிரகாம் பண்டிதர் (1869 - 1919)

  • கல்வி, இசை ஆய்வு, சித்த மருத்துவம், அச்சு, புகைப்படம், சோதிடம், வேளாண்மை ஆகிய தளங்களில் இயங்கியவர்.
  • தமிழிசையின் அமைப்பு மற்றும் வேர்களை ஆராயத் தொடங்கி, அது ஒரு பண்பாட்டு இயக்கமாக வளர்ச்சிபெற அடித்தளமிட்ட தமிழிசை இயக்கத்தின் முன்னோடி.
  • ‘கருணாமிர்த சாகரம்’ நூல் வழியாகத் தொல்தமிழ் இசையின் பண் அமைப்பு முறையைக் கணித ரீதியாக விளக்கிய பெருமைக்குரியவர்.

25 February, 2024


பம்மல் சம்பந்தனார் (1873 - 1964)

  • நாடகம், சட்டம், நீதித்துறை, மொழிபெயர்ப்பு, நாடக வரலாறு ஆகிய தளங்களில் இயங்கியவர்.
  • நாடகங்களை முதன் முதலில் உரைநடையில் எழுதியும், இயக்கியும் தமிழ் நாடகக் கலைக்குப் புதிய வடிவம் தந்தவர். நாடகத்துறைக்குப் பங்காற்றியதால் ‘தமிழ் நாடகத் தந்தை’ எனப் போற்றப்படுவர்.
  • ‘பத்மபூஷண்’ உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.



25 February, 2024


இராஜா அண்ணாமலையார் (1881 - 1948)

  • கல்வி, தமிழிசை, அறப்பணி, வங்கி ஆகிய தளங்களில் இயங்கியவர்.
  • தமிழிசை இயக்கத்தைத் தோற்றுவித்து அதன் தலைவராக இருந்து இசைக் கலைஞர்களின் திறமைகள், தமிழிசை ஆய்வுகளை ஊக்குவித்தவர். சென்னை மாகாண முதல் சட்டசபையின் உறுப்பினர், நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் பணியாற்றியவர்.
  • அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தை சிதம்பரத்தில் நிறுவியவர்.

25 February, 2024


காவடிச்சிந்து' அண்ணாமலையார் (1865 - 1891)

  • தமிழிசை, இலக்கணம், சிற்றிலக்கியம், தல புராணம் ஆகிய தளங்களில் இயங்கியவர்.
  • நினைத்த மாத்திரத்தில் தமிழில் மிகச் சிக்கலான பாடல்களையும்கூடப் பாடக்கூடிய வல்லமை பெற்றவர். ‘சிலேடைப் புலி’ என்றழைக்கப்படுபவர்.
  • தமிழில் முதன் முதலில் செவ்வியல் நடையும் நாட்டுப்புறச் சந்தமும் கொண்ட வண்ணச்சிந்து பாடியதால் ‘காவடிச் சிந்தின் தந்தை’ எனப் புகழப்படுபவர்.

25 February, 2024


தி இலக்குமணார் (1864-1950)

  • நாடகம், இசைத்தமிழ், மொழிபெயர்ப்பு, வேர்ச் சொற்கள், கலைச் சொல்லாக்கம் ஆகிய தளங்களில் இயங்கியவர்.
  • கட்டளைக்கலித்துறை செய்யுள் வகையில் எதுகை மோனைகள் இல்லாமல் எழுதும் புதுமை முறையைப் புகுத்தியவர். “தமிழ்க் கல்விச்சாலைகளை நிறுவுதலே தமிழை வளர்ப்பதற்கு முதல் வழி” என முன்மொழிந்தவர்.
  • இசைத் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகளுக்காக ‘இசைத் தமிழ்ச் செல்வர்’ என்ற பட்டம் பெற்றவர்.

25 February, 2024


மெய்யியல் அறிஞர்கள்

ஆனந்த குமாரசாமி (1887 - 1947)

  • இதழியல், கட்டுரை, திறனாய்வு, மொழிபெயர்ப்பு, வரலாறு, பண்பாடு, தத்துவம், கலை மரபு, ஓவியம், சிற்பம் ஆகிய தளங்களில் இயங்கியவர்.
  • இந்தியக் கலைகளின் சிறப்பை உலகிற்கு அறிமுகப்படுத்தியதில் முதன்மையானவர். இலங்கைத் தமிழறிஞர்.
  • பாஸ்டன் நகர் நுண்கலை அருங்காட்சியக இந்தியக்கலைப் பிரிவுக் காப்பாளராகவும் ஆய்வாளராகவும் பணியாற்றியவர்.

25 February, 2024


Page 4 of 20, showing 9 record(s) out of 177 total